×

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அறிவிப்பு சிஸ்டம்

கோவை, பிப். 20: கோவை அரசு மருத்துவமனையில் செயல்படும் விபத்து மற்றும் அவரசிகிச்சை பிரிவில் நோயாளிகள் அறிவிப்பு சிஸ்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் என ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களில் விபத்து உள்ளிட் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரசிகிச்சை திட்டம் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு, சிவப்பு, மஞ்சள், பச்சை என நிறங்களில் வார்டுகள் செயல்படுத்தப்படுகிறது. தவிர, தீவிர சிகிச்சை பிரிவும் உள்ளது. நோயாளியின் தன்மையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட பிரிவு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வார்டில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க அனுமதியில்லை. இவர்கள், வார்டின் வெளியில் தங்க வேண்டிய நிலையுள்ளது. இதனால், நோயாளிகளின் உறவினர்களை டாக்டர்கள் அழைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் முறையை செயல்படுத்த உள்ளது. இதன்படி, நோயாளியின் பெயர் குறித்து அறிவிக்கப்படும். அப்போது, நோயாளியின் உறவினர்கள் வார்டிற்குள் சென்றால் போதும்.  மேலும், நோயாளிகளுக்கு இதன் மூலம் அறிவுரைகளும் அறிவிக்கப்படும். ஏற்கனவே, இந்த பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் ஐசியு வார்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர், ஒரு சில மாதங்களில் நிர்வாக காரணங்கள்
கூறி அதனை நிறுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது