×

அடுத்தடுத்து 2 பேருக்கு டெங்கு 27வது வார்டு பொதுமக்கள் பீதி

சிவகங்கை, பிப்.20: சிவகங்கை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குப்பை, கழிவு நீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது.  
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் ஏராளமான வார்டுகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் தேங்கியுள்ளன. இதுபோல் கழிவு நீர் செல்வதற்கும் வழியில்லாமல் உள்ளது. இந்நிலையில் 27வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பாக்கியலெட்சுமி(48),  தினேஷ்குமார்(26) ஆகியோர் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து டெங்குவால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேங்கி கிடக்கும் குப்பைகள், பல நாட்களாக அடைத்து நிற்கும் சாக்கடை நீர், பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகபடியான கொசுதொல்லைகளால் 27வது வார்டு முழுவதும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திமுக சிவகங்கை நகர் செயலாளர் துரை ஆனந்த் தெரிவிக்கையில், ‘‘27வது வார்டில் கழிவு நீர், குப்பை தேங்குவது குறித்து நகராட்சியில் பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவேயில்லை. அதனால் தான் தற்போது டெங்கு காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தற்போது கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் இந்த அலட்சிய போக்கை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொன்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : ward public ,
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...