×

வேணுகோபால சுவாமி கோயில் தேரோட்டம்

நாமகிரிப்பேட்டை, பிப்.20: நாமகிரிப்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
நாமகிரிப்பேட்டையில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் கோயிலில்  சுவாமிக்கு திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 17ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ருக்மணி, சத்யபாமாவை வேணுகோபால சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, ராசிபுரம் தொழில் அதிபர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் பெண்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். கடைவீதி, மெயின்ரோடு, அரியாகவுண்டம்பட்டி, சேனியர்தெரு வழியாக தேர் நிலையை வந்துசேர்ந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Venugopala Swamy Temple ,
× RELATED நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்