×

திருச்செங்கோட்டில் 1008 சிவலிங்க பூஜை ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.20:  திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில், 6வது ஆண்டாக 1008 சிவலிங்க பூஜை நடைபெற உள்ளது. அது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பூஜை அழைப்பிதழை அகில பாரதிய  துறவியர் பேரவை உறுப்பினர் மயில் முருகேசு சுவாமிகள் வெளியிட, துணைத்தலைவர் மனோகரன் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்கு, திருச்செங்கோடு பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் 1008 குடும்பங்கள் பங்கு பெறும் 1008 சிவலிங்க பூஜை நடத்த முடிவானது. இந்த பூஜையில் துறவிகள், சந்நியாசிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பங்கேற்க அழைப்பது என்றும், மழை வேண்டியும், உலக அமைதி வேண்டியும் கூட்டு பிரார்த்தனை நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பூஜையில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனியாக சிவலிங்கம், ருத்ராட்சம், கங்கை நீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. கூட்டத்தில், மகளிர் பிரிவு செயலாளர் லலிதா பழனிவேலு, செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், பூபாலன், ராஜமாணிக்கம், வசந்தா அம்மாள், மலர்விழி வஜ்ரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : puja consultation ,Tiruchengode ,
× RELATED பள்ளி அருகே செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு