×

ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் துப்புரவு பணிகளில் மந்தம் கடற்கரை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.20: திருப்பாலைக்குடி கிராமத்தில் சுகாதார பணிகள் முறையாக நடைபெறாததால், சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதால், சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட திருப்பாலைக்கு ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துப்புறவு தொழிலாளர்கள் கிடையாது. இருக்க கூடிய துப்புறவு பணியாளர்களுக்கு தகுந்த வாகன வசதிகளும் குறைவுதான். இதனால் ஊர் முழுவதும் குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் குவியல் குவியலாக குவிந்து
காணப்படுகின்றது.

இந்த பாலிதீன் கவர்கள் காற்று அடிக்கும் போது தெருக்கள், ரோடு, கடற்கரை தண்ணீர் வரை சென்று விடுவதால் எங்கு பார்த்தாலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் மற்றும் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் சேர்ந்துள்ள குப்பைகளில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஊராட்சியில் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் இல்லாத வேலையில் அந்த இடத்தில் அந்தந்த பஞ்சாயத்து கிளர்க்குகள் மேல் அதிகாரிகளின் உத்தரவுபடி ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி
வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஊராட்சியில் கிளர்க், கிராம ஊராட்சிகளின் பி.டி.ஓ ஆகியோர் லஞ்சப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பனியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கிளர்க் பணியிடம் காலியாக உள்ளது. வேறு ஒரு ஊராட்சியில் இருந்து கிளர்க் ஒருவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், ஊரின் குடிநீர் பிரச்னை உள்பட சுகாதாரப் பணிகளில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் குப்பை கூழங்கள் நிறைந்த கிராமமாகவும் காட்சியளிக்கின்றது.  எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவாமல் இருக்க உதவ வேண்டும் என்று கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Panchayat ,Secretary Suspend Cleaner Disaster Shore ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு