×

ரூ.2 ஆயிரம், 6 ஆயிரம் சிறப்பு நிதி பொங்கல் பரிசு பொருள் வாங்கிய அனைவருக்கும் வழங்க வேண்டும்

சாயல்குடி, பிப்.20: மத்திய,மாநில அரசுகள் வழங்கக் கூடிய சிறப்பு நிதியை பொங்கல் பொருட்கள் வாங்கிய அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசும், நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 2ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசும் அறிவித்தது. இதற்காக கடந்த இரண்டு வாரமாக 5 ஏக்கருக்கு குறைவாக விவசாயம் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் அந்தந்த பகுதி ஜெராக்ஸ் கடைகளில் விண்ணப்ப படிவத்திற்காக அலை மோதி வருகின்றனர். விண்ணப்ப படிவத்தில் போட்டோ ஒட்டப்பட்டு, தேவைப்படும் சான்று நகல்களை இணைத்து அந்தந்த வி.ஏ.ஓகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். சான்றுகளை பதிவேற்றம் செய்யும் பணியில் ராமநாதபுரம் மாவட்டதிலுள்ள 9 தாலுகாகளில் கடந்த இரண்டு வாரமாக வருவாய்துறை அலுவலர்கள் இரவு,பகலாக வேலை பார்த்து வருவதால், பொதுமக்கள் தேவைப்படும் பிற அவசர சான்றுகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

இதுபோன்று தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்திற்காக மாவட்டத்திலுள்ள 11 யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், புதுவாழ்வு திட்ட பணியாளர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், மகளிர் மன்றத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து, பயனாளிகளில் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் யூனியன் அலுவலகத்திலும் பிற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டபேரவை விதி 110ன் கீழ் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள சுமார் 60 லட்சம் பேருக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 யூனியன்களில் உள்ள 249 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த பெரும்பாலனோர் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். கடந்த 8 வருடங்களுக்கு மேலாக போதிய மழையின்றி விவசாயம் பொய்த்து போய், வறுமையில் வாடி வருகின்றனர், இதனை போன்று மாவட்டத்திலுள்ள பனைமர தொழிலாளர்கள், மீனவர்களும் வறுமையில் வாடி வருகின்றனர்.

ஆனால் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள நிலையில் வாழ்ந்து வரும் இவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சான்று பெறாமல் உள்ளனர். ரேசன்கடை மலிவு பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்திய ஏழை மக்கள் அனைவருக்கும், ரூ.ஆயிரத்துடன் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தொடர்வ றட்சியை கருத்தில் கொண்டு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மத்திய,.மாநில அரசுகள் வழங்கக் கூடிய ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.6 ஆயிரம் நிதி உதவிகளை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் பொருத்த கூடாது வண்டிக்காரத் தெருவில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடைத்த பின்பும்   தண்ணீர் கசிவு ஏற்படவே தற்போது குழாயை சுற்றிலும் 2 மூடை சிமிண்ட் போட்டு காங்கிரீட் போட்டுள்ளனர். நிரந்தர தீர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், வண்டிக்காரத்தெருவில் 400 மீட்டர் தூரத்தில் 10 இடங்களில் காவிரி குழாய், பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, வண்டிக்காரத் தெருவில் ஏற்பட்ட குழாய் உடைப்பால் நொச்சிவயல் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு விரைவில் குடிநீர் விநியோகிக்கப்படும். காவிரி இணைப்பு பெற்றவர்கள் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

*பட்டியலில் குளறுபடி அதிகம்
*அவசர சான்று பெற முடிய வில்லை
வசதியானவர்களும் சேர்ப்பு
பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2013ம் ஆண்டில் அப்போது பதவியிலிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் தங்களுக்கு வேண்டியவர்களையும், வசதி படைத்தவர்களையும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்த்திருந்தனர். இந்த பட்டியலைக் கொண்டு தான் இப்போது இந்த சிறப்பு நிதி வழங்கப்பட உள்ளது. இந்த தவறான பட்டியலில் பலர் வசதி படைத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். உண்மையிலேயே வறுமை நிலையில் உள்ளவர்கள் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது. இப்படி குளறுபடிகள் நிறைந்த பட்டியலை வைத்துக் கொண்டு சிறப்பு நிதி அரசு வழங்க உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வசதி படைத்தவர்களுக்கு அரசின் சிறப்பு நிதி வழங்கப்படுவது வேதனையாக உள்ளது என்றனர்.

Tags : Special Pongal Pongal ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை