×

கிழக்கு கடற்கரை சாலையில் இடிந்து விழும் நிலையில் வால்மீகி கோயில்: விபத்து அபாயம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையின் நடுவில் அமைந்துள்ள வால்மீகி முனிவர் கோயிலின் சுவர்கள் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும்படி,  பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் திருக்கோயில் பழமை வாய்ந்த திருத்தலம். இக்கோயிலுக்கு கிழக்கு மற்றும் மேற்கு என 2  நுழைவாயில்கள் உள்ளன. கோயிலின் மேற்கு  கோபுரம் அருகே கிழக்கு கடற்கரை  சாலையின் நடுவே, இக்கோயிலுக்கு சொந்தமான வால்மீகி முனிவர் கோயில் அமைந்துள்ளது.மருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வால்மீகி முனிவர் கோயிலுக்கு சென்று வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இக்கோயிலின் மேற்பகுதியை சுற்றி கருங்கற்களால் சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்  அமைக்கப்பட்ட இந்த சிலாப்புகள், தற்போது வலுவிழந்து ஒவ்வொன்றாக பெயர்ந்து விழுகின்றன. கோயிலின் சுற்றுச்சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டி வலதுபுறத்தில் காய்க்கறி மார்க்கெட், இடதுபுறத்தில் பஸ் நிறுத்தமும் உள்ளது. பஸ் நிறுத்தம் மற்றும் மார்க்கெட் பகுதிக்கு செல்பவர்கள் இந்த கோயிலை ஒட்டியபடி சாலையை கடந்து செல்கின்றனர்.  தற்போது, வலுவிழந்து காணப்படும் கோயிலால், விபத்து ஏற்படும்படி, பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் இக்கோயிலை சீரமைக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...