×

பழநி மலைக்கோயிலில் உலகநலன் வேண்டி 1008 சங்கு பூஜை

பழநி, பிப். 20: பழநி மலைக்கோயிலில் உலகநலன் வேண்டி 1008 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் உலகநலன், அமைதி வேண்டியும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டியும் 1008 சங்கு பூஜை நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை சங்குகளில் ஊற்றி சிறப்பு யாகம் நடந்தது. யாகபூஜையில் வைக்கப்பட்ட புனிதநீர் உள்ள சங்குகள் உச்சிகாலத்தில் எடுத்து செல்லப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : shrine venue ,world ,moon ,Palani hills ,
× RELATED சில்லி பாயின்ட்…