×

பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை விரைந்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடையம், பிப். 15: ஆலங்குளம் தொகுதியில் பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பூங்கோதை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனது தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களது குழந்தைகளுக்கு கல்வித்தொகையாக 1 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.750, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.900, உயர்நிலை படிப்பவர்களுக்கு ரூ.1,750, மேல்நிலை மாணவர்களுக்கு ரூ.2000, கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொழிற்சார் கல்வி புரபசனல் கல்லூரியில்  படிப்பவர்களுக்கு  ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினேன். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிலோபர் கபில், விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அமைச்சர் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை. மாநில அரசு பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். எனவே மத்திய மண்டல இயக்குநர், உடனடியாக கல்வி உதவித்தொகையை மொத்த வழங்காவிடில் மக்களை திரட்டி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

Tags : demonstration ,Peedi ,children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...