×

பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி

விழுப்புரம், பிப். 15: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்கேற்றார். ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வரவேற்புரை வழங்கினார். இஎஸ்எஸ்கே கல்விக் குழுமத்தின் தலைவர் சாமிக்கண்ணு நோக்கவுரை வழங்கினார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் அருணகுமாரி, சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பற்றி அறிமுகவுரை ஆற்றினார். பின்னர் மத்திய அமைச்சர் பேசும் போது, இந்தியாவின் எதிர்கால தூண்கள் இளம் தலைமுறையினர். அவர்கள் இன்றைய காலகட்டத்தில் பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு மொழிகளை கற்றுக்கொண்டு சிறந்து விளங்க வேண்டும். மகாத்மா காந்தி முதல் முதலாக பெண்களுக்காக போராடியவர். பெண்கல்வி அவசியம். 55 ஆண்டுகளில் பெண் கல்வியை 4 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியால் கல்வி கற்றுள்ளனர் என கூறினார். இந்நிகழ்ச்சியில் லயன் ஆர்.சந்திரன், சரவணன், சண்முகம், ஜெயகுமார், ராமமூர்த்தி மற்றும் பல்வேறு தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி செயலர் செந்தில்குமார் நன்றி
கூறினார்.



Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...