கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 வாலிபர்கள் அதிரடி கைது

வில்லியனூர், பிப். 15:
வில்லியனூர் அடுத்த கீழூர் பகுதியில் மங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யனார் கோயில் அருகில் 3 பேர் பீர்பாட்டில் மற்றும் கத்தியுடன் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கீழூர் பகுதியை சேர்ந்த கவுதமன், மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த சூர்யா, சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது.மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில், கவுதமனுக்கும் கீழூர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருவதால், அவரை தாக்குவதற்காக கவுதமன் அடியாட்களை அழைத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : youths ,
× RELATED பெரும்பாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரி வெட்டி கொலை