×

தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்டத்தில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவியும், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், 460 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வீதம் 3.6 கிலோ கிராம் தங்கமும், ₹1.8 கோடி மதிப்பில் திருமண நிதி உதவியும், 220 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களையும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், சப் கலெக்டர் சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் காளிதாசன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஆர்த்தி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Festival ,
× RELATED திருவனந்தபுரம் விமான நிலையத்தில்...