×

சாலையோர ஆக்ரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

தொண்டாமுத்தூர், பிப் 14:  கோவை அருகே தொண்டாமுத்தூர் வழியாக பூண்டி, ஈஷா யோகாமையம், கல்லூரிகள், பள்ளி வேன்கள் டூரிஸ்ட் பஸ்கள் அதிகமாக வந்து செல்கின்றன. தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையம் முதல் சந்தைபேட்டை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஓட்டல்கள் அடுப்புகள் ரோட்டில் வைக்கப்பட்டு உள்ளதும், கடைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையோரம் உள்ள ஆக்ரமிப்புகளை தாங்களாவே அகற்றவேண்டும் என கெடு விடுத்தனர். பெட்டிகடைகள் வைத்திருப்போர் மற்றும் கடை முன்பு இருந்த தகர சீட்டுகளை தாங்களாவே அப்புறப்படுத்தினர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாராபட்சம் காட்டுவதாகவும், முறையாக சர்வே ெசய்து அளந்து பிறகு அகற்றுமாறு கட்டிட உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆக்கிரப்புகள் அகற்றும் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், போக்குவரத்து அதிகமாக ஏற்படும் சந்தைபேட்டை முதல் போலீஸ் நிலையம் வரை முறையாக சர்வே செய்யவேண்டும். பாராபட்சம் காட்டாமல் ஆக்கிரப்புகளை அகற்றவேண்டும். மேலும் 4 வழி சாலையாக மாற்ற தனியார் நிலத்தை கையகப்படுத்தி ரோட்டை அகலப்படுத்தவேண்டும். மேலும் சந்தைபேட்டை முன்பு கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் நிறுத்துவதற்கு தடை செய்து். சந்ைதபேட்டையின் உள்ளே இடம் ஒதுக்கவேண்டும்.  இந்த பகுதியில் நீண்ட நேரம் பஸ்சை நிறுத்தி விட்டு செல்லகூடாது.  டவுன் பஸ்கள் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்லவும் மட்டும் நிறுத்தவேண்டும். நரசீபுரம் செல்லும் பஸ்கள் நிலவள வங்கி முன்பு நிறுத்த இடமாற்றம் செய்யவேண்டும்.  சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கவேண்டும், போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Agitation Removal ,Strike ,
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை