×

தரகம்பட்டியில் குளத்தில் கொட்டப்படும் மருத்துவ செட்டிக்குளத்தில் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்டு 2 ஆண்டாக பூட்டிக் கிடக்கும் உணவு பதப்படுத்துதல் மையம்

] மக்கள் வரிப்பணம் வீண்
] விவசாயிகள் குற்றச்சாட்டு
பாடலூர், பிப்.14: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுடன்   2 ஆண்டுகளாக பூட்டிய நிலையில் கிடக்கும் பொது உணவு பதப்படுத்துதல் மையம். மக்கள்  வரிப்பணம் வீணாவதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.  தமிழகத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை வகிக்கிறது. இதில் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர், இரூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள பொம்மனப்பாடி, சத்திரமனை, அம்மாபாளையம், லாடபுரம்,  எசனை, அனுக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர்  மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் ஆண்டு தோறும்சாகுபடி செய்யப்படுகிறது. இதன்படி சின்ன வெங்காயத்திலிருந்து மதிப்பு கூட்டுப்பொருள் தயார் செய்து விற்பனை செய்யும் வகையில் செட்டிகுளத்தில் உணவு பதப்படுத்துதல் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசின் உணவு   பதனிடும் தொழிற்சாலை அமைச்சகத்தின் மூலம் தஞ்சையில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப கழகம் மூலம் செட்டிகுளத்தில் கடந்த 2017ம் ஆண்டு பொது உணவு பதப்படுத்துதல் மையம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அதில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யும் சின்னவெங்காயத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள் தயார் செய்து அதனை லாபத்துடன் விற்பனை செய்யும் வகையில் அதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. அந்த மையம் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு விவசாயிகள் இந்த சின்ன வெங்காயத்தில் இருந்து எவ்வாறு மதிப்பு கூட்டுப் பொருள் தயாரிப்பதன் பயன்பாடு குறித்து விளக்கிக் கூறப்பட்டது சின்ன வெங்காயத்தில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக தயாரித்தால் லாபம் கிடைக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.   இதற்காக அந்த மையத்தில் சின்ன வெங்காயத்தை அதன் தாளில் இருந்து நறுக்கி தனியாக சேகரிப்பது, அந்த சின்ன வெங்காயத்தை தோல் நீக்குவது, அதன் பின்னர் அதனை சிறு துண்டுகளாக நறுக்குவது, அதனை வறுப்பது, அதனையடுத்து வறுத்தெடுக்கப்பட்ட சின்னவெங்காயத்தை பவுடர் ஆக்குவது, மேலும் அதிலிருந்து பேஸ்ட் தயாரிப்பது  என்று ஒவ்வொரு பணிக்கும் ஒரு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இயந்திரங்கள் அந்த மையம் திறக்கப்பட்ட முதல் நாள் மட்டும் விவசாயிகளுக்கு பார்வைக்காக  காண்பிக்கப்பட்டது. அன்றுடன் மூடப்பட்ட  அந்த பொது உணவு பதப்படுத்தல் மையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பொது உணவு பதப்படுத்தல் மையம் கடந்த இரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடிய நிலையில் உள்ளதால் இந்த மையம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் கிடக்கும் இந்த நிறுவனத்துக்காக மக்களின் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  

 மேலும் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் திறப்பு விழாவுடன் மூடப்பட்ட அந்த மையத்தில் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் கட்டிடத்தின் உள்ளே வைக்கபட்டுள்ளதா, பார்வைக்காக காண்பித்து விட்டு எடுத்துச் சென்றுவிட்டார்களா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.  எனவே விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு உள்ளாகும் மக்களின் வரிப்பணத்தின் மூலம் கோடிக்கணக்கில் செலவு செய்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட பொது உணவு பதப்படுத்தல் மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : food processing center ,
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...