×

நாகேஸ்வரன் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா

கும்பகோணம், பிப். 14: கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா  நடந்தது.
கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு பெற்றது. இந்த கோயிலில் பிரகன்நாயகி சமேத வில்வனேசுவரரை சூரியன், நாகராஜன் ஆகியோர் பூஜித்து பலன் அடைந்ததால் வில்வனேசுவரர் நாகேஸ்வரர்  எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் நாகதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.இத்தகைய சிறப்புகள்  பெற்ற இந்த கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நேற்று  நடந்தது. இதையொட்டி சிறப்பு பரிகார பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை, நாகேஸ்வரருக்கு பாலாபிஷேகம், லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் 108  பெண்கள் அமர்ந்து பரிகார பூஜைகளில் ஈடுபட்டனர்.

Tags : ceremony ,Nageswaran Temple ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...