ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்

கும்பகோணம், பிப். 14: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசிமக விழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி நடந்தது.இதையடுத்து தினம்தோறும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வெள்ளி பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர் கோயில் வீதிகளில் உலா வந்தனர். நேற்று இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள், யானை அம்பாரியில் வீதியுலா நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக வரும் 19ம் தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது.

× RELATED வீரபாண்டி செழியன் நினைவுநாள் ஊர்வலம்