×

நாசரேத் பள்ளிக்கு எல்சிடி டிவி மக்கள் நீதி மய்யம் வழங்கியது

நெல்லை, பிப். 14: தூத்துக்குடி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாசரேத் திருமறையூர் செவித்திறன் குறைவுடையோர் பள்ளிக்கு எல்சிடி டிவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.    மாவட்ட பொறுப்பாளர் சேகர்(மத்தி), யோகேஷ்(தெற்கு) தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் அலெக்ஸ், நடராஜன், பகத்சிங், சங்கரன், பசுபதி, வழக்கறிஞர் அணி பிரகாஷ், வர்த்தக அணி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் ஏரல் பகுதி பொறுப்பாளர் யோகராஜ், நாசரேத் பகுதி பொறுப்பாளர்கள் ஆனந்த், விஜய், அருண்குமார், அஜித், ஜேக்கப்ஸ்டீபன், ஆலன் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : school ,Nasserat ,
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்