×

இருண்டு கிடந்த ஏடிஎம் மையத்திற்கு வெளிச்சம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

நாகை, பிப்.13:  தினகரன் செய்தி எதிரொலியால் இருண்டு கிடந்த ஏடிஎம் மையத்தில் மின்விளக்கு எரிய துவங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை   அரசு மருத்துவமனை அருகே  தேசிய வங்கியின் (ஸ்டேட் பேங்) ஏ.டி.எம்.  உள்ளது. அந்த பகுதியில் அரசு மருத்துவமனை, காவலர் குடியிருப்பு, பெட்ரோல்  பங்கு போன்றவையும் உள்ளது. ஸ்டேஸ் வங்கி ஏடிஎம்மை தவிர வேறு எந்த ஏடிஎம் மையமும் இங்கு இல்லை. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க இந்த ஏடிஎம் இயத்திரத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த ஏடிஎம் மையத்திற்கு  காவலாளியும் இல்லை. தற்போது ஏடிஎம் இயந்திரம் உள்ள  அறையில் மின்விளக்கு  எரியவில்லை.  இதனால்  இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும்   வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் வெளிச்சத்தில் இயந்திரத்தை இயக்கி   பணத்தை எடுத்து செல்கின்றனர்.
 ஏ.டி.எம். இயந்திரம் உள்ள  அறை இரவு  நேரத்தில் இருட்டாக உள்ளதால் அந்த இயந்திரம் பின் பகுதியில் யாரேனும்  பதுங்கி இருந்து பணத்தை தட்டி பறித்து செல்லும் அபாய நிலையில் உள்ளது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் இந்த ஏ.டி.எம். மையத்தில்   வாடிக்கையாளர்கள் அச்ச உணர்வுடன்  பணம் எடுத்து வருவது குறித்தும். மேலும்   இரவு நேரத்தில் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது  பற்றியும்.  உடன் சம்பந்தப்பட்ட வங்கி  ஏ.டி.எம். இயந்திரம் உள்ள அறையில்  மின் விளக்கு எரியவிட வேண்டும் என்று தினகரன் கடந்த 2ம் தேதி  படத்துடன் செய்தி
வெளியிடப்பட்டது.
தினகரன் செய்தி எதிரொலியால் உடன் சம்பந்தபட்ட வங்கி ஏ.டி.எம். இயந்திர அறையில் மின் விளக்குகளை எரியவிட்டு  சி.சி.டி. கேமரா செயல்படுகிறதா என்றும்,  தொடர்ந்து வங்கி அதிகாரிகள்  கண்காணித்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் தற்போது இரவு நேரத்தில்  அச்சமின்றி அந்த ஏ.டி.எம். இயந்திரத்தை பயன் படுத்தி வருகின்றனர்.   செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags : Customers ,
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...