×

ஆனைகட்டி அருகே யானை கோயிலில் சின்னதம்பி யானைக்காக வழிபாடு செய்த மக்கள் மீண்டும் தங்கள் பகுதியில் வலம் வர வேண்டுதல்

பெ.நா.பாளையம்.பிப்.13: சின்னதம்பி  யானை நலமுடன் இருக்க வேண்டி யானை ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில்  உள்ள யானை கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.  கோவை ஆனைகட்டி,  சின்னதடாகம் பகுதியில் சுற்றி திரிந்து பிடிபட்ட சின்னதம்பி யானை கடந்த  ஜனவரி மாதம் 25ம் தேதி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த  யானை அங்கிருந்த கிளம்பி உடுமலை பகுதியில் கடந்த 12 நாட்களாக கிராம வயல்வெளிகளுக்குள் சென்று   அட்டகாசம் செய்து வருகிறது. சின்னதம்பி இந்த  பகுதியிலேயே உலா வருவதால் அதனை பார்க்க தினமும் மக்கள் கூட்டம்  அலைமோதுகிறது. அவர்களை கண்டு கொள்ளாமல் தன் வீட்டு தோட்டம் போல கிடைப்பதை  சாப்பிட்டுக்ெகாண்டு சின்னதம்பி உலா வருவதால் மக்கள் வந்து கண்காட்சி போல  பார்த்து செல்கிறார்கள். சின்னதம்பி யானைக்கென தனி ரசிகர்கள் கூட்டமும்  உருவாகியுள்ளது. கரும்பு, நெல், வாழை பயிர்கள் அது சேதப்படுத்தி வரும்  சூழ்நிலையிலும் அதனை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

இது தொடர்பாக  மாவட்ட கலெக்டரிடம் மனு ெகாடுக்கப்பட்டு உள்ளது.சின்னதம்பி யானை நலமுடன் இருக்க  வேண்டி ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானை கோயிலில் மக்கள்  சிறப்பு வழிபாடு செய்தனர்.
 இந்த பகுதியில்தான் முதலில் சின்னதம்பி யானை உலா  வந்து குறும்பு செய்தது. இங்கிருந்துதான் அதனை வனத்துறையினர் பிடித்து  டாப்சிலிப்பில் விட்டனர். இப்போது உடுமலை பகுதியல் உலா வரும் சின்னதம்பி  யானையை என்ன செய்ய ேபாகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஆனைகட்டி பகுதி  மக்களுக்கு எழுந்துள்ளதால் அவர்கள் இந்த வழிபாட்டை நடத்தி உள்ளனர். இதுபற்றி யானை ேகாவில் பூசாரி பதுவன் கூறும்போது, நாங்கள் கோயிலில் யானை  சிலைகளுக்கு படையலிடுவோம். இங்கு முகாமிட்டிருந்தபோது சின்னதம்பி யானை  இங்கு வரும் எங்களுக்கு மிச்சம் வைத்து சாப்பிட்டுவிட்டு போ என்று சொன்னால்  சென்றுவிடும். அந்த அளவுக்கு பண்புள்ள யானை. அதற்கு ஏதும் நேரக்கூடாது  என்று இந்த பூஜையை நடத்தினோம் என்றார். பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து  கொண்டனர்.

Tags : Chinnathambi ,Annagakatti ,
× RELATED கீழப்பழுவூர் அருகே டூவீலர் மீது அரசு...