×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

அரியலூர், பிப்.13: அரியலூரில்  ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு மாதா மாதம் உதவி தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்தனர். இதனால் நீதிமன்றத்திற்னு வழக்கிக்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆனதையடுத்து மாவட்ட நீதிமன்றங்கள் பெற வழக்கறிஞர்கள்  பெரும் போராட்டம் செய்து மாவட்ட நீதிமன்றங்களை பெற்றனர். இந்நிலையில் மாவட்டத்திற்கு அனைத்து நீதிமன்றங்களை  கொண்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு போதிய கட்டிட இடவசதி இல்லாத காரணத்தால் சில நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
இதனையடுத்து  தமிழக அரசு அதற்காக இடத்தை தேர்வு செய்ய தனிக்குழு அமைத்தது. அந்த குழு  அரியலூர் அருகே உள்ள அம்மாகுளம் சாலையில் உள்ள இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் இதுவரை  ஒருங்கிணைந்த நீதிமன்றம் துவங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை வழங்கவேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சங்க கட்டிடம் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்தனர். இதனால்  நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : Lawyers ,Ariyalur ,
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...