×

புதுச்சேரி அரசு அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

புதுச்சேரி, பிப். 13:   விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி சுப்ரமணியேஸ்வர ராவ் புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் துறையின் துணை இயக்குநர் சத்தியமூர்த்தி போக்குவரத்து துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் சிவராஜ் மீனா ஏனாம் மண்டல அதிகாரியாகவும், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியராகவும் (வருவாய்த்துறை) மாற்றப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் கதிர்வேல் ஸ்பின்கோ நிர்வாக இயக்குநராகவும், போக்குவரத்து துறை துணை ஆணையர் சச்சிதானந்தம் இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 4 அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிசிஎஸ் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் புதுச்சேரி நகராட்சி ஆணையராகவும், முரளிதரன் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் துணை இயக்குநராகவும், மோகன்குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரவிபிரகாசுக்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி நிகழ்ச்சி நிர்வாக அலுவலர் மாணிக்க தீபனுக்கு திட்ட அமலாக்க முகமையின் இணை செயல்திட்ட இயக்குநர், வணிக வரித்துறை இணை ஆணையர் ஆகிய பொறுப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய சிறை தலைமை கண்காணிப்பாளர் சக்திவேலுக்கு புதுச்சேரி மாவட்ட துணை கலெக்டர் பொறுப்பும், சமூக நலத்துறை இயக்குநர் சாரங்கபாணிக்கு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.இதற்கான கவர்னர் கிரண்பேடியின் உத்தரவை தலைமை செயலர் அஸ்வனிகுமார் பிறப்பித்துள்ளார். 

Tags : Puducherry ,government officials ,
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது