×

மாவட்ட டேக்வாண்டோவில் சாம்பியன்

விருதுநகர், பிப். 13: சிவகாசி சித்துராஜா இன்டர்நேஷனல் பள்ளியில், குட்டி ஜப்பான் டேக்வாண்டோ அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் 20 பள்ளிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நோபிள் பள்ளி சார்பில் கலந்து கொண்ட 23 மாணவ, மாணவியர் தங்கப்பதக்கம், 16 பேர் வெள்ளிப்பதக்கம், 8 பேர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.அதிக பதக்கம் பெற்ற நோபிள் பள்ளிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி சேர்மன் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலர் டாக்டர் வெர்ஜின் இனிகோ, பயிற்சி ஆசிரியர் மணிகண்டன் பாராட்டினர்.

Tags : District ,
× RELATED பெண் தொடர்பு காரணமாக போலீஸ்காரர் கொலை: விசாரணையில் திடுக் தகவல்