×

குழந்தை தொழிலாளரை பணியமர்த்தினால் சிறை

சிவகங்கை, பிப். 13: குழந்தை தொழிலாள்ர்களை பணியமர்த்தினால் சிறைத்தண்டனை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குழந்தை தொழிலாளர் சட்டம் 1986ம் ஆண்டு சட்டத்தில் வீட்டு வேலை, உணவு நிறுவனங்கள், சிற்றுண்டி சாலைகள், டீ கடைகள், தெருவோர உணவு நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்துவது சட்டபடி குற்றம். சட்டத்தை மீறும் உரிமையாளருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக நீடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தை தொழிலாளர் இருப்பின், தொழிலாளர் ஆய்வாளர், தொண்டி ரோடு, சிவகங்கை (தொலைபேசி எண்.04575-240521), கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், சிவகங்கை, மாவட்ட குழந்தை தொழிலாளர் அலகு அலுவலகம், சிவகங்கை ஆகிய இடங்களில் தெரியப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : child worker ,
× RELATED பெருமாநல்லூரில் ஓட்டலில் பணியாற்றிய குழந்தை தொழிலாளி மீட்பு