×

சிவந்திபுரத்தில் திமுக கிராமசபை கூட்டம்

வி.கே.புரம், பிப். 13: சிவந்திபுரத்தில் திமுக சார்பில் கிராமசபை சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அம்பை ஒன்றியச் செயலாளர் பரணி சேகர் தலைமை வகித்தார். பகுத்தறிவு பேரவை மாவட்டச் செயலாளர் நெடுஞ்செழியன், மாணவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் ஜெகன், வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வர்த்தக அணி  ஒன்றிய அமைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். சிவந்திபுரம் ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற உள்ளிட்ட பொதுமக்கள், தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்,  சாலை சீரமைப்பு, ரேஷன் கடைகளில் தரமாக பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வலியுறுத்தினர். இவற்றுக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன்,  நெல்லை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்கையில் ‘‘கோரிக்கை மனுக்கள்  கலெக்டரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும். தவறும்பட்சத்தில் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விரைவில் மலரும் திமுக ஆட்சியில் உறுதியாக நிறைவேற்றப்படும்’’ என்றனர். கூட்டத்தில் தொண்டர் அணி மாநில துணை அமைப்பாளர்  ஆவின் ஆறுமுகம், தேர்தல் பணிக்குழு மாநில துணைச் செயலாளர் ராஜம் ஜான்,  வி.கே.புரம் நகரச் செயலாளர் கணேசன்,  விவசாய அணி மாவட்டச் செயலாளர்  மாஞ்சோலை மைக்கேல், துணை அமைப்பாளர் பீட்டர்சுவாமிநாதன், குட்டிகணேசன், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் வைகுண்டம், தொண்டர் அணி முத்துராமலிங்கம், செல்வம் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். தொடர்ந்து அடையக்கருங்குளம், கோடராங்குளம் ஆகிய இடங்களிலும் திமுக சார்பில் கிராமசபை சிறப்பு கூட்டங்கள் நடந்தன.

Tags : meeting ,DMK Gram Sabha ,Sivanthipuram ,
× RELATED வாசகர் வட்ட கூட்டம்