×

மக்காச்சோளம் ஏற்றுமதியில் 16 கோடி மோசடி: பெண் தொழிலதிபருக்கு 2 நாள் போலீஸ் காவல்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளுக்கு மக்காச்சோளம் ஏற்றுமதி செய்ததில்  16 கோடி மோசடி செய்த பெண் தொழிலதிபரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனம் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மக்காச்சோளம் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தநிலையில் இந்த நிறுவனத்திற்கு மக்காச்சோளம் வாங்கி தருவதாக திருவள்ளூர் டிரைவர்ஸ் காலனி வெங்கடேசன் நகரை சேர்ந்த சுபத்திரா என்பவர் வெங்கடேசனிடம் கூறினார்.
இதற்காக இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதற்காக 45 கோடியே 84 லட்சத்து 8 ஆயிரத்து 112 ரொக்கம் கைமாறியது.  இதில் 29 கோடியே 66 லட்சத்து 35 ஆயிரத்து 853க்கு மக்காச்சோளம் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் 16 கோடியே 18 லட்சத்து 44 ஆயிரத்து 259 தொகைக்கான மக்காச் சோளத்தை சப்ளை செய்யாமல் இருந்துள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டபோது சுபத்ரா, ஸ்ரீதர் என்பவரை அறிமுகம் செய்துள்ளார். எனினும் இருவரும் மக்காச்சோளம் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் பணத்தை திருப்பி கேட்டபோதும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். எனவே ஏமாற்றும் நோக்குடன் செயல்பட்டு வந்த சுபத்ரா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என ரமேஷ் சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சுபத்ராவை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் இன்னும் வேறு யார், யார்கெல்லாம் தொடர்பு உள்ளது. மேலும் பணத்தை என்ன செய்தார், என்பதையெல்லாம் குறித்து விசாரணை செய்ய வேண்டி உள்ளது, என்று கூறி சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜரானர், வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ராவை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Tags : police detainee ,lady industrialist ,court ,Egmore ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...