×

முத்துப்பேட்டையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் ராகுல்காந்தி பிரதமராக அனைவரும் விரும்புகின்றனர் மயூரா ஜெயக்குமார் பேச்சு

முத்துப்பேட்டை, பிப்.12: ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர் என  முத்துப்பேட்டையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக காங்கிரஸின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் பேசினார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்  கந்தவேல், வட்டார தலைவர்கள் பாலகிருஷ்ணன், வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக  தமிழக காங்கிரசின் புதிய மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்  பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் தற்பொழுது காங்கிரஸ் அலை எழுச்சியுடன் காணப்படுகிறது அதேபோல் இந்தியா முழுவதும் பிரகாசமாக உள்ளது. தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று எல்லாதரப்பினரும் விரும்பு கின்றனர். நீங்கள் எல்லாம் வரும் தேர்தலை கணக்கீட்டும், கட்சியை பலப் படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு நிர்வாகிகளும் கிராமங்கள், கிளைகள், வார்டுகள் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து கட்சியை பலப்படுத்தி துடிப்புடன் செயல் படவேண்டும்
என்றார்.
கூட்டத்தில் மாவட்ட
விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், மாவட்ட மீனவர் அணி தலைவர் நிஜாமுதீன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Rahul Gandhi ,Congress ,council ,Muthupetai Mayura Jayakumar ,
× RELATED தேர்தலுக்குப் பிந்தைய...