×

புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி

திருத்துறைப்பூண்டி,பிப். 12: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடி பவனி அதனைதொடர்ந்து கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் மாலையில்  ஆலயத்தை சுற்றி தேர்பவனி, ஜெயமாலை மற்றும் புனித லூர்து அன்னை ஆலயநவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் பங்குதந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் கூட்டுபாடல் திருவிழா திருப்பலி நடைபெற்றது.  தஞ்சை மறைமாவட்ட முதன்மை குரு ஞானபிரகாசம் திருப்பலி நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து திருதேர்பவனி நடைபெற்றது.இதில் பங்குமன்றஉறுப்பினர்கள், பங்கு இறை மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : St. Lourdes Mother Temple Derpavani ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...