×

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் மண்ணில்புதைந்து கிடந்த இருசக்கர வாகனங்கள் சீரமைப்பு

திருத்துறைப்பூண்டி, பிப்.12:  திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் மண்ணில்புதைந்து கிடந்த இரு சக்கர வாகனங்கள்  தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைத்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் பின்னர் மன்னை சாலையில் ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்ததது.அதன் பிறகு டிஎஸ்பி அலுவலகம் எதிரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாககாவல் நிலையம் இயங்கி வருகிறது. திருத்துறைப்பூண்டி பகுதி விபத்து மற்றும் திருட்டு, வாகன சோதனையில் பிடிபட்ட 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காவல் நிலையம் சுற்றியும் செடி கொடிகள் மண்டியும் மண்ணில் புதைந்து கிடக்கிறது.இருசக்கர வாகனங்களை திருப்பி ஒப்படைக்க வழக்கு கோர்ட் மூலம் முடிக்க வேண்டும்.ஆனால் காவல் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறை ஒருபுறம், வருகிற அதிகாரிகளும் அடிக்கடி இடமாற்றம் இதன் காரணமாகவும் வழக்குகளை சீக்கிரமாக முடிக்க முடியாமல் போகிறது.எனவேமண்ணில் புதைந்து கிடக்கும் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி நல்லநிலைமையில் வைப்பது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனையடுத்து கடந்தபல நாட்களாக செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்து இரு சக்கரவாகனங்களை ஒழுங்குபடுத்தி அடுக்கி வைத்துள்ளனர்.மேலும் வழக்கை விரைந்து முடித்து வாகனங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்று பொதுமக்கள்மாவட்டகாவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை
வைத்துள்ளனர்.

Tags : Police Station ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...