×

கும்பகோணம் பகுதி வணிக நிறுவனங்களில் வாஸ்து ஆமை வளர்ப்பு பகவான் கிருஷ்ணரின் மறு உருவமா?

கும்பகோணம், பிப். 12: கும்பகோணம் நகரத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் வாஸ்து ஆமைகள் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகின்றன.
மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு என்பது கண்டிப்பாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி உயிருள்ள ஆமையை வீட்டில் வாங்கி வளர்க்கும் போது கெட்ட சக்திகள் அகலுவதோடு பிரச்னைகளும் பறந்தோடும் என்று கடந்த சில காலங்களாக கூறி வருகிறார்கள்.
அதன் படி தற்போது உயிருள்ள ஆமை வீடுகள், உணவு விடுதிகள்,  வணிக நிறுவனங்களில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. உயிருள்ள ஆமையை வளர்த்தால் கெட்ட ஆற்றலை வெளியேற்றி, அதற்குப் பதிலாக நன்மை தரும் ஆற்றலை உருவாக்கம் செய்து குடும்பத்தில் அமைதியையும், வணித நிறுவனத்தின் வளத்தையும், வளர்ச்சியையும் அள்ளிக் கொடுக்கும்.
மேலும் பாற்கடலை கடையும் போது மந்திர மலையை தாங்குவதற்கு விஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. எனவே இந்த புனித ஆமை கடவுள் கிருஷ்ணரின் மறு உருவம் என்று கூறுவார்கள். இத்தகைய வாஸ்து படி சிறப்பு பெற்ற ஆமை கும்பகோணம் மகாமக குளக்கரையிலுள்ள உணவு விடுதிகளில் வியாபாரம் சிறக்கவும், அமைதி நிலவவும் வளர்க்கப்படுகிறது.
இதே போல் கும்பகோணம் பகுதியிலுள்ள உணவு விடுதிகள், ஸ்டார் ஓட்டல்கள், வீடுகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் தற்போது ஏராளமானோர் வளர்த்து வருகின்றனர். இது குறித்து வாஸ்து ஆமை வளர்க்கும் உணவு விடுதியின் உரிமையாளர் கூறுகையில், எனக்கு தொழில் மிகவும் நலிவடைந்து போனதால், மனம் உடைந்திருந்த நேரத்தில் எனது நண்பர் மூலம் உயிருள்ள வாஸ்து ஆமை பற்றி கூறினார்.
ஆனால் ஆமை இருந்தால் நன்மை கிடைக்காது என்று கூறி வரும் நிலையில் தொழில் நஷ்டத்தின் காரணத்தால் வேறு வழியில்லாமல்,  பெங்களூரிலுள்ள ஆமை வளர்ப்பவர்களிடம் இரண்டு ஆமை குஞ்சுகளை வாங்க ரூ.2 ஆயிரத்தை தபால் மூலம் அனுப்பினேன்.
அவர்கள் கொரியர் மூலம் இரண்டு ஆமை குஞ்சுகளை அனுப்பி வைத்தனர். 6 மாதங்கள் ஆன நிலையில் இப்போது பெரியதாக வளர்ந்து விட்டதால் மேலும் 3 ஜோடி ஆமை குஞ்சுகளை வாங்கி வளர்த்து வருகிறேன். இதற்காக வணிக நிறுவனத்தில் குபேர திசையான வடக்கு திசையில் தண்ணீர் தொட்டி கட்டி அதில் விட்டு, வளர்த்து வருகிறேன். இதற்கு தேவையான உணவை குஞ்சுகளை கொடுப்பவர்களே கிலோ ரூ.600க்கு விற்பனை செய்கிறார்கள் என்றார்.

Tags : area ,Kumbakonam ,Krishna ,enterprises ,
× RELATED இந்திய ஸ்கேட்டிங் அணிக்கு கோவை மாணவர் தேர்வு