×

குடந்தை அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க தொமுச நிர்வாகி வேண்டுகோள்

தஞ்சை, பிப். 12: தனியாருக்கு சாதமாக போக்குவரத்து கழகங்களை ஒழித்து கட்டும் தமிழக அரசின் போக்கை கண்டித்து குடந்தை அரசு போக்குவரத்துகழக தலைமை அலுவலகம் முன்பு இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று குடந்தை, நாகை மண்டல தொமுச பொதுச்செயலாளர் பாண்டியன்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பேருந்துகளின் எண்ணிக்கைகளை கிளை மேலாளர் குறைப்பது. சேமபணியாளர் தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரத்தை தடை செய்வது. பாதுகாப்பு பிரிவு அலுவலக உதவியாளர், மஸ்தூர் துப்புரவு பணியாளர் பணி இடங்களை முற்றிலுமாக ஒழிப்பது. அந்த பணிக்கு வெளியாட்களை நியமிப்பது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று பணி வழங்
குவதை தடை செய்வது.
தடங்களின் துரத்தை விருப்பம்போல் அதிகப்படுத்தி பணி நேரத்தை அதிகப்படுத்துவது. ஏற்கனவே பெற்று வந்த சிறப்பு படிகளை நிறுத்துவது. இயக்க பேருந்துகளின் எண்ணிக்கையை குநைத்து 25 ஆயிரம் பணியிடங்களை ஒழிப்பது. உரிய நியாயமான விடுப்புகளை மறுத்து
ஆப்சென்ட் போடுவது.
அநியாய தண்டனைகளுக்கு ஊதிய பிடித்தம் செய்வது. தனியாருக்கு சாதகமாக போக்குவரத்துகழகங்களை ஒழிப்பது என்பது உள்ளிட்ட அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது போக்குவரத்து தொழிலாளர்களை மிகப்பெரிய அளவில் பாதிப்படைய செய்யும். எனவே இதை கண்டித்து இன்று குடந்தை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்
என்று தெரிவித்துள்ளார்.

Tags : Trade Unions Protest Demonstration ,
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு