×

இயக்கப்பட்டு வந்த பேருந்து திடீர் நிறுத்தம் டிஆர்ஓவிடம் திமுக குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, பிப்.12: இயக்கப்பட்டு வந்த பேருந்து திடீர் நிறுத்தப்பட்டதால் டிஆர்ஓவிடம் திமுக குற்றம்சாட்டியது.
புதுக்கோட்டை  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நேற்று  நடைபெற்றது. டிஆர்ஓ ராமசாமி தலைமை வகித்து மனுக்களை பெற்றார். திமுக நகர செயலாளர் நைனாமுகமது அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:  புதுக்கோட்டை கமாராஜபுரம் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக தினமும் காலை 10.30 மணிக்கு  அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கம் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பேருந்து இயக்கவதை  என்ன காரணத் தினாலோ நிறுத்திவிட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை  அனு பவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் அந்த பேருந்தை இயக்க தகுந்த  நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்
பட்டுள்ளது.

Tags : DMK ,DMO ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்