×

புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்காதோருக்கும் சம்பளம் நிறுத்தி வைப்பால் அவதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு

திருமயம்,பிப்.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பளத்தை  எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடாதவர்களுக்கும்  சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேதனையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 22ம் தேதி அரசு ஊழியர்களை உள்ளடக்கிய ஜாக் டோ- ஜியோ  சங்கத்தினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளி ட்ட 9அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால்  அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஒரு வாரம் முடங்கியது. இதனை  தொடர்ந்து போராடியவர்கள் மீது அரசு விதித்த கடுமை யான கட்டுப்பாடுகளுக்கு  பயந்து அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதில் ஆயிரக்கணக்கான அரசு  ஊழியர்களை போலீசார் கைது செய்து சிறையிலும் அடைந்தனர்.
இந்நிலையில் கோர்ட்  உத்தரவினை தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்ட த்தை கைவிட்டு பணிக்கு  திரும்பினர். இருந்த போதிலும் அரசு, போராடிய வர்கள் மீது இறக்கம் காட்டாமல்  போராடிய சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் மீது  நடவடிக்கை என்ற பெயரில் குடைச்சலை கொடுத்து வருகிறது.
இது ஒரு புறம்  இருக்க பிப்ரவரி மாதம் தொடங்கி இன்றுடன் 12 நாட்கள் ஆன நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் அரசு  இழுத்தடித்து வருகிறது. இதனால் மாத சம்பளத்தை எதிர் நோக்கி இருந்த அரசு  ஊழியர்கள் கடன் வாங்கி செலவு நிலைக்கு தள்ளப் பட்டுள்ளர்.
இது குறித்து அரசு பள்ளி ஆசிர்களிடம் கேட்ட போது:
அரசு  ஊழியர்களில் முக்கியமாக ஆசிரியர்களை அரசு கீழ்த்தரமாக நடத்துகிறது. கடந்த  மாதம் 30ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் இருந்து ஆசிரியர்களுக்கு சம்பளம்  வழங்க மாவட்ட கருவூலத்திற்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால்  மேலதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை பின்பற்றி அனைத்து கோப்புகளும் ரத்து  செய்யப்பட்டன. இதில் புதிய கோப்புகள் வந்த பின்னர் போராடிய அரசு ஊழியர்களின்  சம்பளம் பிடித்த பின்னரே சம்பளம்  வரவு வைக்கப்படும் என்றனர்.
இதனிடையே  போராடியவர்களுக்கு சம்பளத்தை அடுத்த மாதம் பிடித்தம் செய்யுங்க. இந்த மாத  சம்பளத்தை வழக்கம் போல் வரவு வையுங்க என அரசு ஊழியர்கள் முன் வைத்த கோரிக்கையை  அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்  போடுவதில் பிரச்னை நிலவுகிறது. அரசு ஊழியர்கள் பெரும்பாலும் மாத தவணை முறை  மூலம் தங்களது பிள்ளை கள் படிப்பு, வீட்டுகடன் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி  செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பளத்தை இதுவரை அரசு வழங்காததால் கடன்  வாங்கிமாத தவணை கட்டும் அரசு ஊழியர்கள் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கும்  தள்ளப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடாத அரசு ஊழியர்களிடமும் சம்பளமும்  பிடித்தம் செய்து வைத்துள்ளது மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது என்றனர்.

Tags : Government employees ,teachers ,non-participant ,district ,Pudukottai ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்