×

காசி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் நின்று செல்ல ரயில்வே அமைச்சகத்தில் பரிந்துரை பொதுமேலாளர் தகவல்

மயிலாடுதுறை, பிப்.12: காசி-ராமேஸ்வரம் பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில்  நின்று செல்வதற்கு ரயில்வே அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்படும் என்று  பொதுமேலாளர் குல்ஸ்ரஸ்தா கூறினார்.
மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயில்வே பொது மேலாளர் குல்செரஸ்தா நேற்று ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். மேலும் ரயில்வே ஊழியர்களுக்கான மருத்துவமனையில் விடீயோ கான்பிரஸ்சிங் முறையில் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வசதியை தொடங்கி வைத்தார். ரயில் ஊழியர்கள் தங்கும் அறை கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காசி-ராமேஸ்வரம் பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் நின்றுசெல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நகரும் படிக்கட்டுக்கள் அமைப்பதற்கும் பரிந்துரை செய்யப்படும் என்றார். உடன் மண்டல மேலாளர் உதயகுமார்ரெட்டி, எஸ்ஆர்எம்யூ கோட்ட தலைவர் மணிவண்ணன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.
முன்னதாக வர்த்தக சங்கத்தினர், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கொடுத்த மனுவில்,  திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் காலையிலிருந்து  மாலை வரை நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும், தரங்கை ரயில் வழித்தடத்தில் மீண்டும் ரயில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அந்தியோதயா என்ற தாம்பரம் திருநெல்வேலி செல்லும் ரயிலில் அந்தியோதயா என்ற டிகெட் இல்லை என்றால் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணம் உள்ள டிகெட் இருந்தால் உடனே அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பது போன்ற கேள்விகளை கேட்டிருந்தனர்.

Tags : KSRTC ,Railways ,Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...