×

நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

நாகை, பிப்.12: நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் (தன்னாட்சி) கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மாள் விழாவிற்கு தலைமை வகித்தார். செயலர் செவாலியர் பரமேஸ்வரன் ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் வடிவேல்முருகன் கலந்துக்கொண்டு விளையாட்டு துறையில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்றுக் கூறி விளையாட்டு துறையினால் அரசு பணிகளில் வேலை பெறுவதற்கான வழிகளை விளக்கினார்.  விழா தொடக்கத்தில் முதலாமாண்டு துறை தலைவி தீபா வரவேற்றார். மேலும் முதல்வர் ராமபாலன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் மகன் விஜய், இயக்குனர் விஜயசுந்தரம் ஆகியோர் போட்டிகளை தொடக்கி வைத்து ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர். முடிவில் முதலாமாண்டு மாணவர் தீன் ராமானுஜம் உடற்கல்வி இயக்குனர் வேலவனுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.

Tags : Sports Festival ,NGS EGS Pill Engineering College ,
× RELATED பரமக்குடியில் விளையாட்டு விழா