×

ம்பளம் கோரி முற்றுகை கள்ளிக்குடியில் அதிமுக ஒன்றிய செயலாளர் தலையீட்டால் பணி மறுப்பு டெங்கு களப்பணியாளர் புகார்

மதுரை, பிப். 12: அதிமுக ஒன்றிய செயலாளர் தலையீடு காரணத்தால் பணி வழங்க மறுக்கப்படுகிறது என கள்ளிக்குடி டெங்கு களப்பணியாளர் புகார் மனு கொடுத்தார்.கள்ளிக்குடி ஒன்றிய டெங்கு கொசு ஓழிப்பு களப்பணியாளர் செல்வி. இவர் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கொடுத்த புகார் மனுவில், ‘கள்ளிக்குடியில் டெங்கு கொசு ஒழிப்புக்கான களப்பணியில், 5 ஆண்கள், 15 பெண்கள் ஈடுபட்டோம். சுமார் 5 வருடமாக பணியாற்றி வருகிறோம். தற்போது கோடைகாலம் துவங்கவுள்ளதால் ஆரம்பித்துள்ளதால், சுழற்சி முறையில் எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என ஒன்றிய அதிகாரியிடம் முறையிட்டோம். ஆனால், கள்ளிக்குடி அதிமுக ஒன்றிய செயலாளர் சிபாரிசு செய்த 10 பேருக்கு மட்டுமே தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 10 பேருக்கு பணி வழங்க மறுக்கப்படுகிறது. இதனால் இந்த 10 பேரின் குடும்ப வாழ்வாதரம் கேள்விக்குறியாக உள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் அனைவருக்கும் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.இதுதொடர்பாக கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Dengue activist ,intervention ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...