×

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நிறைவு

அலங்காநல்லூர் பிப். 12: அலங்காநல்லூர் ஒன்றியத்தில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில் கடந்த ஒரு மாதமாக திமுக சார்பில் நடந்து வந்த ஊராட்சி சபை கூட்டம் நிறைவடைந்தது. 7 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தபடவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத கரணத்தால் கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சீர்கேடு அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாத காரணத்தால் விவசாயத்திற்காக தேசிய வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத அவலநிலை உள்ளது. விவசாயத்திற்காக நில உரிமை ஆவணங்கள் மூலம் கடன்களை தள்ளுபடி செய்வதில் அதிமுக ஆட்சியில் பாரபட்சம் நிலவுகிறது. எனவே கடந்த திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்தது போல் அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு முக்கியதுவம் தரவேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்து பேசினர்.
நிறைவாக அலங்காநல்லூர் அருகே 15 பி மேட்டுபட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கென்னடிகண்ணன் தலைமை வகிக்க, மாவட்ட நிர்வாகிகள் பரந்தாமன், விஜயலட்சுமி முத்தையன், ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். தலைமைகழக நிர்வாகி பாலவாக்கம் சோமு கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், நிர்வாகிகள் நடராஜன், வடுகபட்டி ராதாகிருஸ்ணன், கண்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,panchayat council meeting ,union ,Alanganallur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி