பள்ளி ஆண்டு விழா

காரைக்குடி, பிப். 12: காரைக்குடி அருகே, ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியின் 10ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் அனில்குமார் வரவேற்றார். பள்ளி தாளாளர் காளிச்சரன் தலைமை வகித்தார். டிஐஜி காமினி மாணவர்களுக்கு விழாவை துவக்கிவைத்து பேசுகையில், ‘மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் உடையவர்களாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மூலம் மாணவர்கள் தவறான வழிக்கு செல்லாமல் இருக்க வேண்டும்’ என்றார்.தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமிசத்தியமூர்த்தி, அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநர் மணிமேகலை, பேரசிரியர் பாகை கண்ணதாசன், வழக்கறிஞர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் அனிதா, நிர்வாக அதிகாரி அம்பிகா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஷாலின் நன்றி கூறினார்.

× RELATED பால்குட திருவிழா