×

தருவை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று கொடை விழா

நெல்லை, பிப்.12: தருவை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா இன்று ( 12ம் தேதி) நடக்கிறது. கொடைவிழாவில் இன்று காலை 8மணிக்கு பால்குடம் வீதியுலா வரும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், உருவபிள்ளை ஊர்வலம் நடக்கிறது. மதியம் கொடை விழாவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மாலை 4மணிக்கு தீச்சட்டிஎடுத்து பக்தர்கள் வீதியுலா வரும் வைபவம்  நடக்கிறது.இரவு 12 மணிக்கு சாமக் கொடை விழா நடக்கிறது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மறுநாள் (13ம்தேதி)  பகல் 12 மணிக்கு சந்திராஜேஸ்வரி  அம்மன் கோயிலில் சப்பரம் எதிர்சேவை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2மணிக்கு சப்பரம் கோயிலை வந்தடையும். கொடை விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Kodai Festival ,Rajarajeswari Amman ,temple ,
× RELATED பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன்...