ஒரே நாளில் 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம் வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில்

வேலூர், பிப்.12:வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.காட்பாடியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் சிறுமிக்கு திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடு இல்லையாம். இதனால் கடந்த 8ம் தேதி அவசர உதவி எண் ‘1098’ க்கு புகார் செய்தார். அதன்பேரில் கடந்த 9ம் தேதி சிறுமியின் வீட்டிற்கு சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள், சட்டப்படி சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது’ எனக்கூறினர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

அதேபோல், சோளிங்கரை சேர்ந்த 17 வயது பிளஸ்2 படிக்கும் மாணவிக்கு, நேற்று முன்தினம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத மாணவி, ‘1098’ என்ற எண்ணுக்கு போன் செய்து தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள், மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

× RELATED மணக்காடு ஜீவகுமார் இல்ல திருமணம் பாளையில் 24ம் தேதி நடக்கிறது