×

விதைப் பரிசோதனை மையத்தில் ஆய்வு

காஞ்சிபுரம், பிப்.12: காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை மையத்தில் கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் கோவை செல்வராசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்ட விதைப் பரிசோதனை மையத்தில் விதை மாதிரிகள் சரியான முறையில் பரிசோதனை செய்யப்பட்டு உரிய நேரத்தில் முடிவுகள் அனுப்பப்படுகிறதா,  ஆய்வகத்தில் உள்ள  சாதனங்கள் சரியாக இயங்குகின்றதா என்று ஆய்வு செய்தார்.அப்போது, விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், விதைப் பரிசோதனை விவரங்களை கேட்டறிந்தார். தரமற்ற விதை மாதிரிகளின் முடிவுகளை சரிபார்த்த அவர், முளைப்புத்திறன் அறையில் தட்பவெப்பநிலை மற்றும் ஈரப்பதம் சரியான  முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்து உறுதி செய்தார்.தொடர்ந்து, விதைப் பரிசோதனை நிலையத்தில் பராமரிக்கப்படும் அனைத்துப் பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பதையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை அலுவலர் ஜோசப் ஹெக்டர், வேளாண் அலுவலர் வினிதா ஆகியோர் இருந்தனர்.

Tags : Seed Test Center ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...