×

பட்டப்பகலில் அலுவலகத்தில் புகுந்து திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

சென்னை, பிப். 12: பெரும்புதூர் அருகே பட்டப்பகலில் அலுவலகத்தில் புகுந்து திமுக பிரமுகரை வெட்டி கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (48). பிள்ளைப்பாக்கம் ஊராட்சி திமுக செயலாளர். ரியல் எஸ்டேட், தனியார்  கம்பெனிகளில் ஸ்கிராப் எடுக்கும் தொழில்  மற்றும் கட்டுமானம்,  கட்டுமான பொருட்கள் சப்ளை செய்தல் ஆகிய தொழில்கள் செய்து வந்தார். இவரது மனைவி மாரி.  முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர். இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில்  திமுக சார்பில்  பிள்ளைப்பாக்கம் கிராமத்தில்,  ரமேஷ் தலைமையில் நேற்று காலை ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில்  மதியம் நடந்த ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும்  பங்கேற்றார். கூட்டம் முடிந்தவுடன் அங்கேயே சாப்பிட்டு முடித்து, ரமேஷ் காரில் புறப்பட்டார்.ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலை கட்சிப்பட்டு பகுதியில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த பெண் ஊழியரிடம்  இருந்த புத்தகங்களை வாங்கி, வரவு செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென ஆட்டோ மற்றும் ைபக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். திடீரென அந்த அலுவலகத்தில் நுழைந்து, அங்கிருந்த ரமேஷை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்த  பெண் ஊழியர் அலறி கூச்சலிட்டார்.தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக அவருக்கு பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரமேஷ், இறந்ததை உறுதி செய்த மர்மநபர்கள், வௌியே நிறுத்தி இருந்த  காரின் கண்ணாடியை   உடைத்துவிட்டு தப்பிசென்றனர். பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை  கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இதைதொடர்ந்து, எஸ்பி. சந்தோஷ் ஹதிமானி  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள்,  தொழில் போட்டியின் காரணமாக ரமேஷை கொலை செய்தார்களா, அரசியல் முன்விரோதம் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், சம்பவம் நடந்த அலுவலகத்தில் உள்ள  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.குற்றவாளிகளை பிடிக்க அனைத்து செக் போஸ்ட்களிலும் தீவிர சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். இச்சம்பவத்தால்  பெரும்புதூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : DMK ,office ,Sriperumbudur ,Vettikkalai ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதி...