×

ஒற்றை தலைவலியை தடுக்கும் சிறுதானியம்: வேளாண்துறையினர் அட்வைஸ்

காரைக்குடி, பிப். 8:  இந்தியாவில் நீரிழவு நோயினால் பாதிக்கப்படுபவர்களில் 20% பேர் அரிசையை மட்டுமே உட்கொள்வதுதான் காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறுதானியங்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. இதனை  உட்கொண்டால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:
 சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன. பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிகளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியை தடுக்கிறது. சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன.
சிறுதானியங்களிலுள்ள நியாசின் இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது. அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோருக்கு 2ம் வகையான இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது. ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவுகின்றன. சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது.
    அதிகளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது உடல் எடையை சீராக குறைகிறது. பைட்டேட் புற்றுநோய் ஏற்படாமல் காக்க உதவுகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும், சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் உதவுகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Advocates ,
× RELATED காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் உரை