×

பட்டுக்கோட்டை பகுதியில் புயல் நிவாரணம் முறையாக அரசு வழங்கவில்லை கிராம மக்கள் குமுறல்

பட்டுக்கோட்டை, பிப்.8: பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை, வெண்டாக்கோட்டை, சூரப்பள்ளம், செண்டாங்காடு ஆகிய 5 ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேற்படி 5
ஊராட்சிகளிலும் திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளருமான செல்வகணபதி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டங்களில் பங்கேற்ற பெண்கள் பேசுகையில், சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டோம். ஆனால் தமிழக அரசு, கஜா புயல் நிவாரணம் இன்னும் பலருக்கு முறையாக வழங்கவில்லை. குறிப்பாக ஆளும்கட்சிகாரர்களுக்கு மட்டுமே கஜா புயல் நிவாரணம் கிடைக்க பெற்றது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முற்றிலுமாக எங்களுக்கு விவசாய கடன், கல்விக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். மிக முக்கியமாக டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும். தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதிகள் சரியாக இல்லை. அவற்றை சீரமைக்க
வேண்டும் என்றனர்.

Tags : area ,Pattukkottai ,
× RELATED வாட்டி வதைக்கும்...