×

பட்டிவீரன்பட்டியில் ஓவர் லோடு பறிமுதல்

பட்டிவீரன்பட்டி, பிப். 8: பட்டிவீரன்பட்டியிலிருந்து தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிகளவு பாரங்களை ஏற்றி செல்வதாகவும், ஆட்களை ஏற்றி செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்பேரில் வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் தர்மானந்தம் தலைமையிலான அதிகாரிகள் பட்டிவீரன்பட்டியில் வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது அதிக பாரங்களை ஏற்றி வந்தது மட்டுமின்றி அதன்மேல் ஆட்களையும் அமர வைத்து வந்த ஒரு லாரி, ஆட்களை ஏற்றி சென்ற 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 வாகனங்களையும் பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளை மதி்தது வாகனங்களை இயக்க வேண்டும். உரிய ஆவணங்களை வைத்திருப்பது அவசியமாகும். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வேப்பூரில் பரபரப்பு: தீயில் கருகி இளம்பெண் சாவு