×

திருப்பூரில் மோடி வரவேற்பு பேனரை கிழித்ததால் பரபரப்பு

திருப்பூர், பிப். 8: திருப்பூரில் பிரதமர் மோடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு பாஜக.,வினர் சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில்  பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பூர்  கொங்கு பிரதான  சாலையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பிளக்ஸ் பேனர் நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது.இதுகுறித்து தகவலறிந்த பாஜக., வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார்,  பேனரை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.  இந்த பேனரை
கிழித்தது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Modi ,reception bin ,Tirupur ,
× RELATED தமிழகத்தை `புரெவி’ புயல் தாக்கும் அபாயம் முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு