×

சென்னிமலை அருகே கோர்ட்டுக்கு அழைத்து சென்ற கைதியை மிரட்டிய போலீசார்

பெருந்துறை, பிப்.8: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தனியாருக்கு சொந்தமான நிறுவனத்திடம்  டெல்லியை சேர்ந்த பிரதீப்குமார் பின்டல்  மற்றும் மும்பையை சேர்ந்த பூபேந்திர திரிபாதி ஆகிய இருவரும்கடந்த ஆண்டு ரூ.38 லட்சத்துக்கு மஞ்சள் கொள்முதல் செய்தனர். ஆனால், பணத்தை கொடுக்காமல் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பெருந்துறை போலீசில், நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 7 மாத்துக்கு முன்பு பூபேந்திர திரிபாதியை பெருந்துறை போலீசார் மும்பையில் கைது செய்து பெருந்துறை கிளைச்சிறையில் அடைத்தனர். தலைமறைவான பிரதீப் குமாரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, காவல் நீட்டிப்பு செய்ய நேற்று முன்தினம் பூபேந்தர திரிபாதியை  போலீஸ்காரர்கள் இருவர் கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வெள்ளோடு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பொதுவாக, கைதிகளை அரசு பஸ்சில் அழைத்து செல்வது வழக்கம். ஆனால், இரு போலீசாரும் வாடகை காரில் பூபேந்திர திரிபாதி, அவரது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வெள்ளோடு காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.அங்கு போலீசார் மற்றும் சிலர் காவல் நிலையம் அருகே வைத்து பணத்தை கொடுக்கவில்லை என்றால் உன் குடும்பத்தினரை கொன்றுவிடுவோம் என பூபேந்திர திரிபாதியை  மிரட்டி உள்ளனர். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து பெருந்துறை கிளை சிறையில் ஆஜர்படுத்தி உள்ளனர். வெள்ளோடு காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால் உயரதிகாரிகளுக்கு தெரியாமல் போலீசார் தனியார் நிறுவன அதிகாரிகளுடன் கைகோர்த்து  கைதியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags : prisoner ,court ,Chennimalai ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...