தாரமங்கலத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

ஓமலூர், பிப்.8:  தாரமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், துட்டம்பட்டி உட்பட 7 கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. தாரமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், துட்டம்பட்டி, தெசவிளக்கு, பாப்பம்பாடி, குருக்குபட்டி, எடையபட்டி உட்பட 7 கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாரமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெண்கள், தங்கள் கிராமத்தில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, ரேஷனில் பொருட்கள் கிடைப்பதில்லை, 100 நாள் வேலை கிடைப்பதில்லை, சாக்கடை, தெருவிளக்கு மற்றும் சாலை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று புகார் தெரிவித்து மனுக்களை கொடுத்தனர். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று பொங்கலூர் பழனிசாமி கூறினார். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் செல்வராஜூ, சீனிவாசன், பழனிவேல், சுந்தரம், வெங்கடாசலம், ராஜமாணிக்கம், முத்துசாமி மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: