×

திருமயம், அரிமளம் பகுதிகளில் பணம் பறிக்க வடமாநிலத்தவர்கள் புதுயுக்தி நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருமயம்,பிப்.8: திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள கிராம மக்களின் அறி யாமையை பயன்படுத்தி பணம் பறிக்க வடமாநிலத்தவர்கள் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.தமிழகத்தில் பரவிவரும் புதிய கலாச்சாரம், உணவு பழக்க வழக்கங்களால் நாளு க்கு நாள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்கு மாசடைந்து வரும் சுற்றுச் சூழல் காரண மாக இருந்தாலும், உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பின்மையே, புது புது, நோய்களுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வயது வித்தியாசமின்றி நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஒரு சிலநோய்களுக்கு மருந்துகள் இருந்தாலும் சக்கரைவியாதி, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுவதும் குண படுத்த முடியாது. அதேசமயம் வயது மூப்பினால் வரும் நோய்களை குணமாக் குவது கடினம் என்ற நிலையில் நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயிலிருந்து முழுவதும் விடுபட பல்வேறு மருத்துவ முறைகளை பெற மருத்துவர்களை நாடி மருத்துவ ஆலோசனை, மருந்துகள் வாங்கி உட்கொள்கின்றனர். இதனை பயன்படுத்தி கொண்ட மருத்துவர்களும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை கறக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க வடநாட்டில் இருந்து வரும் ஒரு சிலர் திருமயம், அரிமளம் பகுதி கிராமமக்களிடம் இருக்கும் அறியாமையை பயன்படுத்தி தீர்க்க முடியாத நோய்களை தீர்ப்பதாக கூறி மருந்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.அப்படியாக கடந்த 3ம்தேதி காலை அரிமளம் கடைவீதி பகுதியில் 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட சுமார் 200பாட்டில்களில் அடைக்கப்பட்ட தைலத் துடன் வியாபாரத்தை தொடங்கினார் வடநாட்டு இளைஞர் ஒருவர். அவர் இந்த பாட்டில் உள்ள தைலத்தை கை, கால் வலி உள்ள இடத்தில் தடவினால் தடவிய பகுதியில் உள்ள கெட்டநீர் ஆவியாகி கை, கால், மூட்டு, தலைவலிகள் சரியாகும் எனக் கூவினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் தைலத்தை வலி உள்ள இடத்தில் தடவ சொல்லி கேட்டுக் கொண்டனர். அப்போது தைலம் தடவிய இடத்தில் இருந்து ஆவிபோல் வெளியேறியதோடு , குளிர்ச்சியாக இருந்ததாக தைலம் தடவிக் கொண்டவர்கள் தெரிவித்தனர். இதனிடையே வெளியான ஆவிக்கு கெட்டநீர் என விளக்க மளித்தார் வடநாட்டு இளைஞர். இதனால் ஆச்சரியமடைந்த மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த தைலத்தை வாங்கி சென்றனர்.

இது பற்றி அரிமளம் அரசு மருத்துவரிடம் கேட்டபோது, மருந்து தேய்த்தபின் உடலில் இருக்கும் கெட்டநீர் வெளியாக வாய்ப்பே இல்லை. மேலும் அவர் வைத்திருக்கும் மருந்து பாட்டிலை விட்டு மருந்தை எடுத்து உடலில் தேய்க்கும் போது காற்றுடன் வினை புரிந்து வேதிமாற்றம் நிகழ்வதாலேயே இது போன்ற ஆவி வெளியாகிறது. இதுபோன்ற விற்பவர்களுக்கு நிரந்தர முகவரியோ, அலுவ லகமோ கிடையாது.எனவே பொதுமக்கள் இது போன்ற மருந்துகளை வாங்கி பயன் படுத்துவதன் மூலம்பக்க விளைவுகள் ஏற்படுத்தவாய்ப்புள்ளது.எனவே இது போன்ற விளம்பர பேச்சுகளை பார்த்து ஏமாற வேண்டாம் எனகேட்டுக் கொண்டார்.அரிமளத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வீரையா கூறியதாவது:நான் தினந்தோறும் நின்று கொண்டே வேலை செய்வதால் மூட்டுவலியால் அவதிப்பட்டுவருகிறேன். இந்நிலையில் மூட்டுவலிக்கு மருந்துவிற்பதாக் எனது நண்பர் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது போட்டி போட்டுக் கொண்டு வடநாட்டவர்விற்கும் மருந்தைமக்கள் வாங்கி சென்றனர்.இதைஉண்மைஎனநினைத்துநானும் ரூ.100 கொடுத்து மருந்து வாங்கி வந்து. இரண்டு நாட்கள் வலிஉள்ள இடத்தில் தேய்த்தேன். எந்த ஒரு மாற்றமும் இல்லை. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது என்றனர்.கலர் ேமாதிரம் விற்பனைஅரிமளம் பகுதியில் வடநாட்டு இளைஞர் ஒருவர் பல வண்ணம் கொண்ட மோதிரத்தை பரப்பி வைத்து கொண்டு அருகில் தமிழில் ரேக்கார்டிங் செய்த ஆடியோ ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதில் தாய் ,தந்தையர்களை மதிக் காதவர்கள் தயவு செய்து இந்த  மோதிரத்தை வாங்க வேண்டாம். ஏனென்றால் பெற்றோர்களை மதிக்காதவர்களுக்கு மோதிரம் பலனளிக்காது. இந்த மோதி ரத்தை வாங்கி சென்றால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்குவதோடு பணவரவு அதிகரிக்கும். மேலும் தொழில் நஷ்டம், நியாபகமின்மை உள்ளவர்கள் வாங்கி செல்லவும் என இது போன்ற அன்றாட மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை கூறிஅதனை சரிசெய்யும் என அந்த ஆடியோ ஓடிக் கொண்டிருக்கிறது.

காவல்துறை நடவடிக்கை
திருமயம், அரிமளம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் குல்பி ஐஸ், சமக்காளம் (போர்வை). வீடடு உபயோக பொருட்கள் விற்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து கொண்டே இருக்கிறது. இவர்கள் விற்பனைக்கு வருகிறார்களா அல்லது இரவு நேரங்களில் திருடுவதற்கு உலவுபார்க்க  வருகிறார்களாஎனதொpயவில்லை. இதில் ஒரு சிலர் கண்ணியமாக நடந்து கொள்ளும் நிலையில் பெரும் பாலா னோர் மக்களை முட்டாளாக்கி பணம் பார்க்கின்றனர். எனவே காவல் துறை யினர் இது போன்றுமக்களைமுட்டாளக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.

Tags : Northern States ,areas ,
× RELATED வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட்...