×

கந்தர்வகோட்ைட நெப்புகையில் புதிதாக கட்டி 6 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் சமையல் கூடம்

கந்தர்வகோட்டை, பிப். 8: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் நெப்புகை ஊராட்சியில் ரூ.2.40 லட்சத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமையல் கூட கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை ஊராட்சியில் பள்ளிக்கூடம் அருகே 2012-13ம் ஆண்டு சமையல்கூடம் கட்டப்பட்டது. ஆனால் புதிய கட்டிடம் திறக்கப்படாததால் இன்று வரை சமையல் கூடம் பழைய இடத்திலேயே நடைப்பெற்று வருகிறது. எனவே விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் கிராம சேவை கட்டிடங்கள்  கட்டப்பட்ட நிலையில் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் நெப்புகையில் சமையல் கூடம் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராத நிலையிலேயே உள்ளது. இதனை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,kitchen ,
× RELATED சிலந்தியாற்றில் கட்டப்படுவது...