×

கோட்டூர் அருகே தீயில் எரிந்தும், விஷம் குடித்தும் கல்லூரி மாணவிகள் 2 பேர் சாவு

மன்னார்குடி, பிப்.8:  திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருமக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட மாங்கொட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி ராஜேந்திரன் என்பவரது மகள் ரம்யா (18). இவர் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற ரம்யா வீட்டின் வாசலில் கிடந்த குப்பைகளை அகற்றி தீவைத்து எரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக  ரம்யாவின் நைட்டியில் தீப்பற்றியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ரம்யாவை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று ரம்யா இறந்தார். இது குறித்து அவரின் தந்தை ராஜேந்திரன் திருமக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல திருமக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட புதுக்குடி கிராமத்தை சேர்ந்த மணிமாறன்  மகள் திரிஷா (18). இவர் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்கள் தீவிர வயிற்று வலி இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற திரிஷா வீட்டில் இருந்த  எலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் திரிஷாவை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமைனக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனனின்றி நேற்று திரிஷா இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை மணிமாறன் திருமக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,Kothore ,killing ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு